உதகைஅம்பேத்கர் பூங்காவை சீரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை
உதகையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ,படகு இல்லம், மரவியல் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளன இதை காண சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் ஏனோ சில பூங்காக்கள் பொலிவு படுத்தப்படாமல் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமன்றி உள்ளூர் மக்களின் பார்வையிலும் தென்படுவதில்லை.
குறிப்பாக 2011ஆம் ஆண்டு உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் டாக்டர் அம்பேத்கர் நினைவுப்பூங்கா அமைக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட ஓரிரு வாரங்கள் மட்டுமே பூங்கா பொலிவு படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
அதன்பிறகு இப்பூங்காவை புனரமைக்கவும் பொலிவுபடுத்தவும் சம்பந்தப்பட்டவர்கள் எடுக்காத முயற்சியால் இன்றுவரை இப்பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது.தற்போது கோடை சீசன் துவங்கிய நிலையில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் பொலிவு படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவுப் பூங்கா இன்றுவரை பராமரிக்கப்படாமல் உள்ளது பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான இன்று அவரின் நினைவாக உள்ள இப்பூங்கா வை மாவட்ட நிர்வாகமானது கவனத்தில் கொண்டு பராமரித்தால் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைவர் எனவும் விரைவில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவச் சிலையை இங்கு நிறுவ வேண்டும்எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu