நவ.3 ல் கிராம அளவில் சிறப்பு பட்டா முகாம்: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

நவ.3 ல் கிராம அளவில் சிறப்பு பட்டா முகாம்: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு
X

கோப்பு படம் 

நீலகிரி மாவட்டத்தில்பட்டா சிறப்புமுகாம்நடைபெறும் இடங்கள் குறித்து நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

இது தொடர்பாக, நீலகிரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களில், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை கிராம அளவில் சிறப்பு முகாம்கள் கடந்த 29-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி உதகை தாலுகா சோலூர் கிராமத்தில் சப்-கலெக்டர் மோனிகா; குந்தா தாலுக்கா பிக்கட்டி கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லோகநாதன்; குன்னூர் தாலுகா மேலூர் கிராமத்தில் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி; கோத்தகிரி தாலுகா அல்லிமாயார் கல்லம்பாளையம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி; கூடலூர் தாலுகா செருமுள்ளி கிராமத்தில், வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன்; பந்தலூர் தாலுகா சேரங்கோடு கிராமத்தில், உதவி ஆணையர் (கலால்) மணி ஆகிய கண்காணிப்பு அலுவலர்கள் முன்னிலையில், முகாம் 03.11.21 புதனன்று நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story