நீலகிரி மாவட்டத்தில் பட்டா மாற்றுதல் சிறப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பட்டா மாற்றுதல் சிறப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு
X

பைல் படம்.

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி. அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாகளுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 15.12.21 (புதன்கிழமை) ஊட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பில்லிகம்பை சமுதாய கூடத்தில் வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, குன்னூர் தாலுகா உபதலை காந்திநகர் சமுதாய கூடத்தில் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கோத்தகிரி தாலுகா குண்டாடா சமுதாய கூடத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, கூடலூர் தாலுகா பாடந்தொரை தனியார் அரங்கில் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் ஆகிய அலுவலர்கள் முன்னிலையில் பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்படுகிறது. 17-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி