உதகை நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லாததால் கட்சி பிரமுகர்கள் வாக்குவாதம்

உதகை நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லாததால் கட்சி பிரமுகர்கள் வாக்குவாதம்
X

உதகை நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லாததால் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உதகையில் வார்டு வாரியாக வேட்பாளர்கள் மற்றும் முன்மொழிபவர்கள் தடையில்லா சான்றிதழ் வெகு நேரம் காத்திருந்து பெற்றுச் சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின் போது தடையில்லா சான்றிதழ், குற்ற வழக்குகள் இல்லாததற்கு போலீஸ் சான்றிதழ் போன்றவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனால் உதகை நகராட்சி அலுவலகத்தில் கடை வாடகை, குடிநீர், சாக்கடை, சொத்து வரி உள்ளிட்ட வரி நிலுவை இல்லை என்று தடையில்லா சான்றிதழ் பெற வேட்பாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

வார்டு வாரியாக வேட்பாளர்கள் மற்றும் முன்மொழிபவர்கள் தடையில்லா சான்றிதழ் வெகு நேரம் காத்திருந்து பெற்று சென்றனர்.

அப்போது ஒரு பிரிவில் ஊழியர்கள் இல்லாததால் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!