பெற்ற குழந்தைகளை விற்க முயன்ற பெற்றோர் - உதகையில் பரபரப்பு

பெற்ற குழந்தைகளை விற்க முயன்ற பெற்றோர் -  உதகையில் பரபரப்பு
X
உதகையில், பெற்ற குழந்தைகளை பெற்றோரே விற்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல், கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் ராபின், வயது 25.அதே காந்தல், பகவதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா வயது 20. ஆகிய தம்பதியினருக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது.

இவர்கள், சுமார் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை பிறந்த மூன்று மாதத்திலேயே, உதகை மேரிஸ்ஹில் பகுதியை சேர்ந்தவர் பாரூக் என்பவருக்கு, விற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனது 4 மாத ஆண் குழந்தையை, சேலம் உமா மகேஸ்வரி தம்பதியினர்களுக்கு விற்றுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, ராபினின் 3 1/4 வயது பெண் குழந்தை அவரது தாயார் மோனிஷாவின் அக்கா பிரவினாவின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். ராபின், அவரிடம் சென்று தனது பெண் குழந்தையை கேட்டுள்ளார்.அவர் தர மறுத்ததோடு, எதற்கு குழந்தையை கேட்கிறாய் என்று கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அவர், பணம் இல்லாதததால் மற்ற பிள்ளைகளை விற்றது போல் இந்த பிள்ளையையும் பெங்களூரில் விற்கவுள்ளதாக கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, பாரதியார் அறக்கட்டளையை சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் குழந்தைகள் சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரியிடம், பெண் குழந்தையை தனது பெற்றோர்களை விற்க முற்படுவது பற்றி புகார் அளித்தனர்; அங்கிருந்து, உதகை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு பரிந்துரை செய்தனர்.
உதகை நகர துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி ஆகியோர் குழந்தைகளின் தாய், தந்தை, குழந்தைகளை விற்றுக் கொடுத்தவர் மற்றும் வாங்கியவர்கள் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரே, பெண் மற்றும் ஆண் குழந்தைகளை விற்ற சம்பவம், உதகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil