ஊட்டி; புதிய வகுப்பறை கேட்டு பெற்றோர் காத்திருப்பு போராட்டம்

ஊட்டி; புதிய வகுப்பறை கேட்டு பெற்றோர் காத்திருப்பு போராட்டம்
X

Nilgiri News, Nilgiri News Today- புதிய வகுப்பறை கேட்டு, காத்திருப்பு போராட்டம் நடத்திய பெற்றோர்களிடம் போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தினர். 

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டி அருகே பள்ளியில் புதிய வகுப்பறை கட்டித்தரக்கோரி பெற்றோர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டி தாலூகா கோக்கால் பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சில வகுப்பறை கட்டிடங்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு இதுவரை புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டவில்லை. இதனால் மாணவர்களுக்கு போதிய இடவசதி இன்றி திறந்த வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் காற்று, மழை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணியை தொடங்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் வழக்கம்போல் வந்தனர். அவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ஊட்டி தாசில்தார் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், தொடர்ந்து புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஊட்டி அருகே பள்ளியில் புதிய வகுப்பறை கட்டித்தரக்கோரி பெற்றோர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
தினமும் காலைல சியா விதைகளை சாப்பிடுறீங்களா ?... அப்ப அதுல இருக்க நன்மைகளையும் , பக்க விளைவுகளையும் தெரிஞ்சுக்கோங்க ..!