நீலகிரியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாக வருகை

தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் உற்சாக வருகை புரிந்தனர்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கான பள்ளிகள் இன்று திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் 700 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்காக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து இன்று முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மலை மாவட்டமான நீலகிரியில் இன்று 700 பள்ளிகள் திறக்கப்பட்டன. அதிகாலை முதலே மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை புரிந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர். பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு உடல் வெப்பம் கண்டறிந்து வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்பு ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்பு மூலமே பாடங்களை சொல்லித் தந்த தங்களுக்கு இன்று குழந்தைகளை நேரிடையாக பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், உள்ளிட்டவற்றை வேண்டுமென அறிவுரைகளை வழங்கினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!