உதகை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாடு மையம் திறப்பு

உதகை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாடு மையம் திறப்பு
X

உதகை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.

உதவிகளை கேட்டறிய கட்டுப்பாட்டு மையத்தை 0423-2223256 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உதகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உதகை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் திறந்து வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்கள், வீட்டு தனிமையில் உள்ளவர்களை தினமும் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரிக்கப்படுகிறது.

கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவது, வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு மையத்தை 0423-2223256 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!