மின் உற்பத்திக்காக காமராஜர் சாகர் அணை திறப்பு

ஊட்டி மைசூர் சாலையிலுள்ள காமராஜர் சாகர் அணை நீர், மின் உற்பத்திக்காக திறக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், முக்குறுத்தி நுண் புனல் மின்நிலையம், பைக்காரா நுண் புனல் மின்நிலையம், சிங்காரா, மாயார், மரவக்கண்டி நுண் புனல் மின்நிலையம், பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம் உள்ளிட்ட மின் நிலையங்கள் உள்ளன.

தினசரி, 248.47 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள மின் நிலையங்களுக்கு முக்குறுத்தி, பைக்காரா, போர்த்திமந்து உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் இங்குள்ள முக்குறுத்தி, பைக்காரா, மரவக்கண்டி அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு, மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின், கிளன்மார்கன் அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம் மசினகுடி, சிங்காரா மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நிலவப்படி, மேற்கண்ட அணைகளில், 40 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் இருந்தது. படிப்படியாக அணைகளில் உள்ள தண்ணீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால் மசினகுடி, சிங்காரா மின் நிலையத்தில் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ஆல்துரை கூறுகையில், ''காமராஜர் சாகர் அணையில் நேற்று, தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரை, கிளன்மார்கன் அணையில் தேக்கிவைத்து, மசினகுடி, சிங்காரா மின் நிலையத்தில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும்.'' என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்