உதகையில் சாக்லெட் ஸ்டோரி அருங்காட்சியகம் திறப்பு

சாக்லெட் ஸ்டோரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விளக்கப்படம்.
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோம் மேட் சாக்லேட் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகையாகும். இந்நிலையில் உதகையில் தற்போது இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் உதகையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் 101 வகையான ஹோம்மேட் சாக்லெட் கண்காட்சி தொடங்கியுள்ளது. சிறு குழந்தைகள் முதல் சக்கரை நோயாளிகள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் அவரவர்கள் தேவைக்கேற்ப சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு, அதிக கசப்புத் தன்மை கொண்ட டார்க் சாக்லேட், கிரீன் டீ சாக்லேட் உட்பட 101 வகையான சாக்லெட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது .
பார்வையாளர்களைக் கவரும் வகையில் உதகையில் முதல் கட்டிடமாக கட்டப்பட்ட ஸ்டோன் ஹவுஸ் கட்டிடம் சாக்லெட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ சாக்லெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள லாலிபாப், பல்வேறு கலை பொருட்களை சாக்லெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu