4மாதங்களுக்கு பின்னர் ஊட்டிமலை ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கம்

4மாதங்களுக்கு பின்னர் ஊட்டிமலை ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கம்
X

மீண்டும் தனது சேவையை நாளை முதல்  தொடங்க இருக்கும் ஊட்டி மலை  ரெயில்

ஊட்டிமலை ரெயில் சேவை 4 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் நாளை தொடங்குகிறது

மலைகளின் ராணி ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் சிறந்த கோடை வாசஸ்தலம் ஆகும். ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண நிலையும், நூறு வயதிற்கு மேற்பட்ட மரங்களின் வரலாறு மற்றும் பூத்து குலுங்கும் மலர்கள், செடி கொடிகள் என அனைத்தும் இந்தியாவின் அனைத்து மாநில மக்களையும் கவர்ந்து இழுப்பதோடு உலக சுற்றுலா பயணிகளையும் விரும்பி வரவழைக்கும் இடமாகவும் உள்ளது.

ஊட்டி மலைப்பகுதியின் இயற்கை அழகை முழுமையாக ரசிப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக இயக்கப்படும் இந்த ரெயிலில் பயணித்தால் ஊட்டியின் முழு அழகையும் ரசிக்கலாம் என்பது சுற்றுலாபயணிகளின் கருத்தாகும்.

ஆண்டாண்டு காலமாக இயங்கி வந்த இந்த ரெயில் சேவை கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாகவும், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு இருந்ததாலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது சுற்றுலா தளங்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஊட்டி மலை ரெயில் சேவை செப்டம்பர் ஆறாம் தேதியான நாளை முதல் மீண்டும் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. ஒரு ரெயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையும் இன்னொரு ரெயில் குன்னூருக்கும் ஊட்டிக்கும் இடையேயும் இயக்கப்படும்., பயணிகள் முக கவசம் அணிந்தும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் பயணம் செய்ய முன்வரவேண்டும், ரெயில்வே இலாகாவிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Tags

Next Story
Weight Loss Tips In Tamil