கொரோனா கட்டுப்பாடுகளால் உதகையில் வெறிச்சோடிய வழிபாட்டு தலங்கள்

கொரோனா கட்டுப்பாடுகளால் உதகையில் வெறிச்சோடிய வழிபாட்டு தலங்கள்
X

உதகை மாரியம்மன் கோவில் மூடப்பட்டதால், பத்தர்கள் கோவிலுக்கு முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். 

கொரோனா கட்டுப்பாடுகளால் உதகையில், கோவில்கள்,தேவாலயங்கள், பள்ளிவாசல்களும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, ஜனவரி 14-ந் தேதி முதல், வருகிற 18-ந் தேதி வரை, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டதால், மக்கள் இன்றி கோவில்கள் வெறிசோட்காணப்பட்டன.

உதகை மாரியம்மன் கோவில் மூடப்பட்டதால், பத்தர்கள் கோவிலுக்கு முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் ஆகம விதிகளின்படி பூசாரிகள் சிறப்பு பூஜை மேற்கொண்டனர். வேணுகோபால சுவாமி கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல், தேவாலயங்கள், பள்ளிவாசல்களும் அடைக்கப்பட்டு உள்ளே மக்கள் அனுமதி இல்லை. 5 நாட்கள் வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை. இதனால் வருகிற 18-ந் தேதி தைப்பூசம் பக்தர்கள் இன்றி முருகன் கோவில்களில் நடைபெற உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture