உதகையில் குறும்பட திருவிழா: 30 நாடுகளின் 115 படங்கள் திரையிடப்படும்

உதகையில்  குறும்பட திருவிழா:  30 நாடுகளின் 115 படங்கள் திரையிடப்படும்
X

உதகை குறும்பட விழா 

உதகயைில் டிசம்பர்‌ 3 முதல்‌ 5 வரை மூன்று நாட்கள் நடைபெறும் திரைப்பட விழாவில் 30 நாடுகளின் 115 குறும்படங்கள் திரையிடப்படும்‌.

நீலகிரி ஃபிலிம்‌ கிளப் கடந்த 2016ல் ஊட்டியில்‌ நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி இலாப நோக்கமற்ற கிளப்‌ ஆகும்‌. NFC தமிழ்நாடு மற்றும்‌ கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும்‌ திரைப்பட விழாக்களை நடத்தியுள்ளது .

இது திரைப்பட அழகியல்‌ மற்றும்‌ கலை வெளிப்பாடுகளைக்‌ கொண்டாடுவதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. OSFF ஆனது திரைப்பட அனுபவமிக்கவர்கள்‌, தொழில்‌ வல்லுநர்கள்‌, முதல்முறை திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌, விமர்சகர்கள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌கலை ஆர்வலர்கள்‌ ஆகியோர்‌ சந்தித்து, அற்புதமான சினிமா உலகத்தைப்‌ பற்றிய உரையாடல்களை உள்ளடக்கிய ஓரு திரைப்பட விழாவை உருவாக்க முயற்சிக்கிறது

OSFF பின்வரும்‌ இலக்குகளுடன்‌ உருவாக்கப்பட்டது: இந்தியப்‌ பார்வையாளர்களையும்‌ அடுத்த தலைமுறையையும்‌. உலகளாவிய கிளாசிக்கல்‌ மற்றும்‌ சமகால, எதிர்கால சினிமாவை கற்பிக்கவும்‌ வெளிப்படுத்தவும்‌, இந்தியாவில்‌ புதிய திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ மற்றும்‌ இளம்‌ இயக்குனர்களை ஊக்குவிக்கவும்‌ கொண்டாடவும்‌,. திரைப்படம்‌ எடுக்கும்‌ கலை மற்றும்‌ காட்சி எழுத்தறிவு குறித்து இளம்‌ இயக்குனர்களுக்கு கற்பித்தல்‌, மற்றும்‌ விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, திரைப்படப்‌ பொக்கிஷங்களைப்‌ பற்றிய நுணுக்கங்களை வழங்கவும்‌, நீலகிரியில்‌ உள்ளூர்‌ பொருளாதாரத்தை மேம்படுத்த ஊட்டி குறும்பட விழா (OSFF) மூன்று நாள்‌ நடைபெறும் .

திரைப்பட இயக்குனர்‌, திரைக்கதை எழுத்தாளர்‌, தயாரிப்பாளர்‌ மற்றும்‌ நடிகர்‌ கெளதம்‌ வாசுதேவ்‌ மேனன்‌ சிறந்த படங்களை தேர்வு செய்கிறார்‌. OSFF மூன்று நாட்களில்‌ 30 நாடுகளில்‌ இருந்து 115 குறும்படங்கள் திரையிடப்படும்‌. திரையிடலுக்கு இணையாக, கலந்துரையாடல்‌ நிகழ்ச்சிகள்‌ நடத்தப்படும்‌.

சிறந்த திரைப்படம்‌, சிறந்த இயக்குனர்‌ மற்றும்‌ சிறந்த நடிகருக்கான யானை விருதை தலைமை விருந்தினர்கள்‌ வழங்குவார்கள்‌. இந்த ஆண்டு, உள்ளூர்‌ திறமைகளை ஆதரிக்க புதிய விருதுகள்‌ Jones Sullivan Award என்ற பெயரில்‌ வழங்கப்படவுள்ளது.

இந்த விருது நீலகிரியில்‌ கலை மற்றும்‌ கலாச்சாரத்தின்‌ முன்னேற்றத்திற்கு பங்களித்த நபர்கள்‌ மற்றும்‌ உள்ளூர்‌ திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படுவதாகும். இதன் துவக்கவிழா டிச 3 தொடங்கி டிச 5 வரை நடைபெறவுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!