உதகை அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

உதகை அருகே கல்லட்டி மலைபாதையில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள மாயார் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் மருமகனையும், தங்களது மகளையும் பார்ப்பதற்காக, உதகை வழியாக கல்லட்டி மலைப்பாதையில், சாத்தூரை சார்ந்த பசீர் அகமது, அவரது மனைவி பீமா ஜான் ஆகியோர், இன்று காரில் வந்து கொண்டிருந்தனர்.

கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றுக்கொண்டிருந்த போது, கார் கட்டுபாட்டை இழந்து 21-வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 22-வது கொண்டை ஊசி வளைவில், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன் மனைவி இருவரும் காரின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

இருவரது உடல்களை மீட்க முடியாததால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!