உதகை ராமகிருஷ்ண மடம் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு

கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதித்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முதன் முறையாக ராமகிருஷ்ண மடம் வழங்கியது.

கொரோனோ முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து அமலான ஊரடங்கால், கூலி பணிக்கு செல்லும் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு, ராமகிருஷ்ண மடம் சார்பில், பொதுமக்களுக்கான நிவாரண உதவிகள் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்பட்டன.

அவ்வகையில், உதகை ராமகிருஷ்ண மடம் சார்பில், பொதுமக்களுக்கு ஏற்கனவே நிவாரணங்கள் வழங்கப்பட்ட நிலயில், குடிசைவாழ் பொதுமக்களுக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு, 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், தேவையான உதவிகளை பெற எந்த நேரத்திலும் பொதுமக்கள் ராமகிருஷ்ண மடத்தை அணுகலாம் என ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த திவ்ய நாமா நந்தா சுவாமிகள் தெரிவித்தார்.

Tags

Next Story