உதகை மற்றும் சுற்றுப்பகுதியில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை மற்றும் சுற்றுப்பகுதியில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

உதகையில் பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இன்று அதிகாலையில் துவங்கிய சாரல் மழை, பகல் ஒரு மணிக்கு மேல் கன மழையாக மாறியது.

உதகை, கேத்தி , கல்லட்டி, தலைக் குந்தா, மத்திய பேருந்து நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிப்படைந்தது. தொடர்ந்து மழை நீடிப்பதால் கடும் குளிர் நிலவுகிறது.

Tags

Next Story
Will AI Replace Web Developers