உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் துவங்கிய குதிரை பந்தயம்

உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் துவங்கிய குதிரை பந்தயம்
X

ஊட்டி குதிரைப்பந்தயம் தொடங்கியது

ஆண்டுதோறும் கோடை சீசன் போது நடைபெறும் குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனை முன்னிட்டு மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக குதிரை பந்தயம் நடைபெறாமல் இருந்தது. மேலும் கடந்த ஆண்டு குதிரை பந்தயம் பார்வையாளர்கள் அனுமதி இன்றி நடைபெற்றது.

இந்நிலையில் கோடை சீசனின் துவக்கமாக நடைபெறும் குதிரை பந்தயம் துவங்கியது. முதல் நாளில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் இலக்கை நோக்கி குதிரைகள் சீறிப்பாய்ந்தன இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் கோடை சீசனில் நடைபெறும் குதிரை பந்தயத்தை காண்பது மகிழ்ச்சியாக உள்ளதென உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு புத்தாண்டு நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன.

கோடை சீசனில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியான குதிரை பந்தயம் துவங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து கோடை விழாக்கள் நடைபெற உள்ளதால் வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து மாவட்டம் களைகட்டி காணப்படும் .

Tags

Next Story