உதகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி
உதகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் , புகைப்பட கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
உதகையில், சுதந்திர பெருவிழா கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட ஒரு வார கால புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அம்ரித் முன்னிலையில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 70 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மேலும் 20 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான பணிகளை வங்கி அதிகாரிகள் தாமதமின்றி துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட அரும் பெரும் தலைவர்களை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்கின்ற வகையில் இத்தகைய கண்காட்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள், இளைய சமுதாயத்தினர் இதைக் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
வனத்துறை, தோட்டக்கலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மகளிர் மேம்பாடு சிறுபான்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, அத் துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த செயல் விளக்கங்களும் இந்த கண்காட்சியில் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu