உடனே வரி செலுத்துங்க: உதகை நகராட்சி அதிகாரிகள் அட்வைஸ்

உடனே வரி செலுத்துங்க: உதகை நகராட்சி அதிகாரிகள் அட்வைஸ்
X

உதகை நகராட்சி

உதகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

உதகை நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி, போன்ற வரிகளை நாளைக்குள் செலுத்த வேண்டும். இதற்கு, இன்று கடைசி நாள் என்பதால், நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பொதுமக்கள் வரி செலுத்தி வருகின்றனர். வரி நிலுவை வைத்துள்ளவர்கள், உடனடியாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உதகை டேவிஸ் டேல் பகுதியில், தனியார் கட்டிட உரிமையாளர் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாததால் ரூபாய் 4,50,000 நிலுவை வைத்து இருந்தார். நேற்று நகராட்சி வருவாய் அதிகாரிகள் சொத்து வரி செலுத்தாத தனியார் கட்டிடத்தை கையகப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர். நகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்