/* */

தடுப்பூசியில் சாதனை: மருத்துவத்துறையினருக்கு சான்று வழங்கி கவுரவிப்பு

உதகையில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவத்துறையினரை பாராட்டி அமைச்சர், கலெக்டர் பாராட்டு சான்றுகளை வழங்கினர்.

HIGHLIGHTS

தடுப்பூசியில் சாதனை: மருத்துவத்துறையினருக்கு சான்று வழங்கி கவுரவிப்பு
X

உதகை பழங்குடியினர் பண்பாட்டுமையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவத்துறையினரை பாராட்டி, வனத்துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் சான்று வழங்கினர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை எட்டப்பட்டுள்ளது. இதற்காக, மருத்துவர்கள் மற்றும் அதைச் சார்ந்த பணியாளர்களுக்கு பாராட்டு விழா, உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்றது.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர், மருத்துவத்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்துவது சாத்தியம் இல்லாதது என்ற நிலையை மாற்றி, இன்று தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது. அரசும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் எடுத்த பெரும் முயற்சியால், இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 500 க்கும் மேற்பட்டோர், குழுக்களாக பாராட்டுச் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

Updated On: 19 July 2021 8:57 AM GMT

Related News