தூய்மைப்பணியாளர்கள் மாஸ் கிளினீங் - உதகை பளிச்!

உதகையில் நகராட்சி சார்பில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்ட மாஸ் கிளீனிங்கால் வார்டுகள் பளிச்சிட்டன.

உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நாள்தோறும் நகராட்சி மூலம் ஒவ்வொரு பகுதியிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு வாரமும் மாஸ் கிளீனிங் முறையில் 20க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வார்டுக்கு சென்று முழு தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் இன்று, 32வது வார்டு எல்க்ஹில் எனும் பகுதியில் மாஸ் கிளீனிங் முழு தூய்மை பணி நடைபெற்றது இதில் 20க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்