2 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தவனுக்கு 18 ஆண்டு சிறை

2 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தவனுக்கு 18 ஆண்டு சிறை
X

குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த குற்றவாளி கோபாலகிருஷ்ணன்.  

2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 1லட்சம் அபராதம் 18 ஆண்டு சிறை தண்டனை விதித்தது உதகை மகிளாநீதிமன்றம்

கடந்த 2018 ஆம் ஆண்டு உதகை அருகே சோகத்தொரை எதுமகண்டிப் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவன் அதே பகுதியில் உள்ள 2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இதையடுத்து அச்சிறுமியின் பாட்டி உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம், சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கோபாலகிருஷ்ணனுக்கு 18 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக மாலினி பிரபாகரன் வாதாடினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!