பெண் கொலை தொடர்பாக எஸ்.எஸ்.ஐ. கைது- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்
உதகை அருகே காந்தள் புதுநகர் பகுதியில், அதிகாலை காரில் இறந்த நிலையில் பெண்ணின் சடலத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், மர்மமான முறையில் இறந்த பெண்மணி மாகி 52 என்பதும், இச்சம்பவத்தில் கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையில், முப்பது வருடமாக மாகிக்கும், சப் இன்ஸ்பெக்டருக்கும் தகாத தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, பெண்ணை அடித்துக் கொன்றதாக சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முதல் தகவல் அறிக்கையில், குறிப்பிட்ட பிரிவின் கீழ் சந்தேக கொலையாக பதிவு செய்தனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
கொலையை குற்றவாளியே ஒப்புக் கொண்டுள்ள நிலையில் சந்தேகக்கொலை என முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் எனவே உரிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை கொடுத்தால் மட்டுமே தங்கள் உடலை பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் உதகை G 1 காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu