முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் திறப்பு

முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில்  திறப்பு
X

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இசேவை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

தமிழகத்திலேயே முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

அரசு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும், சிறந்த பணியாளர்கள் கொண்டு ஒரு திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு அரசு இ-அலுவலகம் திட்டத்தை உருவாக்கியுள்ளது .

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் துவக்கி வைத்தார்.

இ-அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமல்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும். இதனால் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும் என ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார்.

இந்த சேவையை துவக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி ப்ரியாதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!