உதகை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: போலீசார் விசாரணை

உதகை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: போலீசார் விசாரணை
X

மின்சாரம் தாக்கி பலியான இடம்.

உதகை அருகே கெந்தொரை எனும் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

உதகை அருகே உள்ள கெந்தொரை கிராமத்தில் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற்றது. அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர் டிரான்ஸ்பார்மரில் பழுதை நீக்க ஏறியுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!