உதகையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை

உதகையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை
X

பைல் படம்.

உதகையில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதகை படகு இல்லம் அருகே தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவா என்பவர் பரத் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளதாகவும் இதையடுத்து இருவருக்கும் இன்று மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். பின்பு ஆத்திரமடைந்த பரத் சிவாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவா உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் பரத்தை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக உதகையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!