அதிகாரிகள் வரவில்லை : குறை தீர் கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள்

அதிகாரிகள் வரவில்லை : குறை தீர் கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள்
X

கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள்.

வெகு நேரம் காத்திருந்தும் கலெக்டர் வராததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

உதகை கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தொலைதூர இடங்களில் இருந்து விவசாயிகள் வந்தனர். இந்நிலையில் மதியம் 12 மணி வரை கூட்டம் தொடங்கவில்லை. கூட்டத்துக்கு கலெக்டர் வரவில்லை.

இதனால் வெகு நேரம் காத்திருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் கலெக்டர் சிறிது நேரத்தில் வந்து விடுவார். அரங்கில் அமருங்கள் என்று கூறினர். இருப்பினும் அவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொள்வதால் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு காண வாய்ப்பு உள்ளது. நாங்கள் வெகு நேரம் காத்திருந்தும் கலெக்டர் வராததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு