நீலகிரியில் நாவல் பழங்கள் விற்பனை மந்தம்
கோத்தகிரியில் தொடர் மழை காரணமாக நாவல் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது.
Jamun Fruit Price Per Kg- கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்கள் நாவல் பழ சீசன் காலமாகும். தற்போது சீசன் காரணமாக நாவல் மரங்களில் பழங்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது. நீலகிரியில் விளையும் நாவல் பழங்கள் சிறியதாக இருந்தாலும், அதிக இனிப்பு சுவை கொண்டது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி சத்துகள் அதிகம். நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாவல் பழங்களை வாங்க, மக்கள் மத்தியில் போதிய ஆர்வம் இல்லை. இதனால், விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
ஒரு கிலோ நாவல் பழம் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டது. வனப்பகுதிகள், சாலையோர நாவல் மரங்களில் உள்ள பழங்களை பழங்களை பறித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தொடர் மழையால் விற்பனை மந்தமாக உள்ளது. விளைச்சல் அதிகரித்தும், போதிய விற்பனை இல்லாததால், நாவல் பழ வியாபாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu