நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு
X

பைல் படம்.

9442365855 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்கலாம் .

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சுமூகமாகவும், அமைதியாகவும், நியாயமான முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பார்வையாளரை 9442365855 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai marketing future