வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்ய அறிவிப்பு
பைல் படம்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி 1.1.2022-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது. 18 வயது பூர்த்தி அடைந்த அதாவது 1.1.2004-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழை திருத்தங்கள், முகவரி மாற்றங்கள் போன்றவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நியமிக்கப்பட்ட அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவற்றில் வருகிற 30-ம் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிடவும், திருத்தங்கள் இருப்பின் சரி செய்து கொள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
எதிர்வரும் 13 , 14-ந் தேதி ஆகிய விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu