உதகை நகராட்சியில் இன்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

உதகை நகராட்சியில் இன்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
X
உதகையிலுள்ள 36 வார்டுகளில் போட்டியிடுவோர் இன்று யாரும் வேட்பு மனு அளிக்கவில்லை.

உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்.

அவர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெற 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வார்டு எண் 1 முதல் 9 வரை வருவாய் பிரிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வார்டு எண் 10 முதல் 18 வரை நகர்நல அலுவலர் பிரிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வார்டு எண் 19 முதல் 27 வரை நகரமைப்பு பிரிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வார்டு எண் 28 முதல் 36 வரை தனி அலுவலர் பிரிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதல் நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. இதனால் வெறிச்சோடி காணப்பட்டது. நகராட்சி அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!