நீலகிரியில் நிறைவு பெற்ற வேட்புமனு தாக்கல்

நீலகிரியில் நிறைவு பெற்ற வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

4 நகராட்சிகளில் மொத்தம் 601 பேர், 11 பேரூராட்சிகளில் 781 பேர் என மொத்தம் 1,382 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று வரை 603 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று ஊட்டி நகராட்சியில் போட்டியிட 48 பேர், குன்னூர் நகராட்சியில் 70 பேர், கூடலூர் நகராட்சியில் 52 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 101 பேர் என மொத்தம் 271 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிகரட்டி பேரூராட்சியில் 55 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 40 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 27 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 63 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 52 பேர், கேத்தி பேரூராட்சியில் 45 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 52 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 83 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 21 பேர், ஓவேலி பேரூராட்சியில் 28 பேர், சோலூர் பேரூராட்சியில் 42 பேர் என மொத்தம் 508 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடைசி நாளில் 4 நகராட்சிகளில் போட்டியிட 271 பேர், 11 பேரூராட்சிகளில் 508 பேர் என மொத்தம் 779 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 4 நகராட்சிகளில் மொத்தம் 601 பேர், 11 பேரூராட்சிகளில் 781 பேர் என மொத்தம் 1,382 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!