உதகையில் 2 மாத ஊதியம் வழங்கப்படாததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உதகையில் 2 மாத ஊதியம் வழங்கப்படாததால்  ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள்.

உதகை நகரில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படாததால் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் செய்தனர்.

நீலகிரி :

உதகை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதியம் தர்லைன்னா நாங்க எப்படி சாப்பிடுவது? என்று கன்னத்தில் கை வைத்து கவலையுடன் இருக்கிறாரோ இந்த பணியாளர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் குப்பை சேகரிப்பு மற்றும் தூய்மை பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களில் 170-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

எல்லா பணியாளர்களும் கவலையில்தான் இருக்கிறார்கள் போலும்.

இது குறித்து ஆணையர் மற்றும் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது சரியான பதில் தருவதில்லை எனவும் தங்களுக்கு இரண்டு மாத ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் என இன்று மாலை திடீரென அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர் அதீத கவலையில் இருப்பார் போலுள்ளது.

ஊதியம் வழங்கும் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings