மாஸ்க் போடலியா? கட்டுங்க அபராதம் :உதகை பூங்காவில் அதிரடி ஃபைன் வசூல்

மாஸ்க்  போடலியா? கட்டுங்க அபராதம் :உதகை பூங்காவில் அதிரடி ஃபைன் வசூல்
X

மாஸ்க் போடாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் நகராட்சி பணியாளர்கள்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு முக கவசம் அணியாமல் வந்தோருக்கு நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி :

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் முக கவசம் அணியாமல் வந்த சுற்றுலாப்பயணிகளுக்கு நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் இது வரை அமலில் இருக்கும் நிலையில்,சில அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கண்காணிக்க குழுக்களை நியமித்துள்ளது.

அதன்படி, உதகமண்டலம் நகராட்சி சார்பில் ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின்பேரில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மேற்பார்வையாளர்கள் கொண்ட குழு முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்