நீலகிரியில் பாஜக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது

நீலகிரியில் பாஜக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது
X

ஊட்டியில் பாஜக சார்பில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் நிர்வாகிகள்

மாவட்டம் முழுவதும் பாஜகவினரிடமிருந்து உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது

உள்ளாட்சி தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு இன்று பெறப்படுகிறது இதன் ஒரு பகுதியாக நீலகிரியில் அனைத்து பகுதிகளில் உள்ள பாஜக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.

பா.ஜ.க சார்பில் நகராட்சி பேரூராட்சிகளில் நகர மன்ற தலைவர், நகர மன்ற உறுப்பினர்களுக்கான விருப்ப மனு இன்று முதல் இருபத்தி ஆறாம் தேதி வரை பெறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள நகர் பகுதியில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு உதகையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் தருமன், மாவட்ட உபதலைவர் பரமேஷ், நகர தலைவர் ப்ரவீன், மாவட்ட செயலாளர் அருண் ஆகியோர் வழங்கினர்.நீலகிரி மாவட்டம் முழுவதும் 6 வட்டங்களில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் ஆர்வத்துடன் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அளித்தனர்.

Tags

Next Story
ai applications in future