நீலகிரி: 2ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மலர் கண்காட்சி
உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124வது மலர் கண்காட்சி வரும் மே 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் உதகைக்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவர தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உட்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டுக்கான கோடை விழாக்கள் குறித்து இன்று உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரீத், கோத்தகிரி நேரு பூங்காவில் மே 7, 8 ஆகிய தேதிகளில் 12வது காய்கறி கண்காட்சியும், உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே 20,21,22, 23, 24 ஆகிய தேதிகளில் 5 நாட்கள் 124வது மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் 14,15ஆகிய தேதிகளில் 17வது ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 28 மற்றும் 29ம் தேதி 62வது பழக்கண்காட்சியும், கூடலூரில் 9வது வாசனை திராவிய கண்காட்சி மே 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை இயக்குநர் பிருந்தா தேவி உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu