நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: நிர்வாகிகள் பங்கேற்பு
நீலகிரியில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டம்.
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம், உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் பில்லன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் முபாரக் அனைவரையும் வரவேற்றார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், விஜயாமணிகண்டன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், திராவிடமணி, செந்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி இனமான பேராசியர் பெருந்தகை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகர,ஒன்றிய,பேரூர், சிற்றூர் பகுதிகளிலும் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் நீலகிரி மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத் அலி, தொரை, பரமசிவன், நெல்லை கண்ணன், ராஜேந்திரன், சிவானந்தராஜா, பிரேம்குமார், உதயதேவன், சுஜேஷ், நகர செயலாளர்கள் ராமசாமி, ஜார்ஜ், காசிலிங்கம், ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சதக்கத்துல்லா, லாரன்ஸ், வெங்கடேஷ், மோகன்குமார், சீனி, செல்வம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ஜெயகுமாரி, எல்கில்ரவி, தேவராஜ், யோகேஸ்வரன், சின்னவர், செல்வராஜ், காந்தாமணி, பவீஷ், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், பாபு, நடராஜன், முத்து, மாதேவ், கிருஷ்ணகுமார், ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், மாதன்(எ)மாயன், தொமுச தோட்ட தொழிலாளர் பொதுச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சேகரன், நாகராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகநாத்ராவ், மத்தீன், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்ட முடிவில் மாவட்ட துணை பொருளாளர் நாசர்அலி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu