நீலகிரி: அரசின் சலுகையில் கட்டணமின்றி 4 லட்சம் பெண்கள் பயணம்
ஊட்டி நகரப் பேருந்து (பைல்படம்)
தமிழக அரசு அறிவித்த சலுகையைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 4.17 லட்சம் மகளிர் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பணிபுரிந்து வரும் பெண்கள் உள்பட அனைத்து மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் அரசின் நகர பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் உதகை, குன்னூரில் என 11 நகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கு தனியாக டிக்கெட் வழங்கப்படுகிறது. நீலகிரியில் இதுவரை நகர பஸ்களில் கட்டணமின்றி பெண்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 164 பேர், மாற்றுத்திறனாளிகள் 2,087 பேர், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 317 பேர், திருநங்கைகள் 279 பேர் பயன் அடைந்து ள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu