விதி மீறினால் நடவடிக்கை பாயும்: நீலகிரி எஸ்.பி எச்சரிக்கை

விதி மீறினால் நடவடிக்கை பாயும்: நீலகிரி    எஸ்.பி எச்சரிக்கை
X

 நீலகிரி எஸ்.பி. பாண்டியராஜன்

உதகையில் ஊரடங்கு அமலில் உள்ளதை பார்வையிட்ட நீலகிரி எஸ்.பி. பாண்டியராஜன், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

கொரோனா காரணமாக தமிழக அரசு அறிவித்தபடி, இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை ,குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஊரடங்கை பார்வையிட்ட, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், மாவட்ட எல்லைகள் மற்றும் மாநில எல்லைகள் மூடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசின் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறி உலா வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். உதகை நகரில் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நீலகிரி மாவட்டம் முழுவதும், ஊரடங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் 472 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது