நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக அம்ரித் பொறுப்பேற்பு

மக்கள், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்; அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்கிறார் புதிய கலெக்டர்.

நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக அம்ரித் பொறுப்பேற்று கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில், கோப்புகளில் கையெழுத்து இட்டு பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட மாவட்ட நிலை அலுவலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல்படி நீலகிரி மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக பணிபுரிவேன். நீலகிரி சூழலியல் அடிப்படிடையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் வரவும், மக்கள் வாழவும் தகுதியானதாக மாவட்டம் இருக்க உறுதி செய்யப்படும்.

மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படும். மசினகுடியில் யானை வழித்தட பிரச்சினைக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture