நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளில் பொறுப்பேற்கும் தலைவர்கள்

நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளில் பொறுப்பேற்கும் தலைவர்கள்
X
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளில் பொறுப்பேற்கும் தலைவர்கள் வெளியாகி இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். நாளை தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடக்கிறது. 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 14 பேர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

பிக்கட்டி பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். உதகை நகராட்சியில் வாணீஸ்வரி, குன்னூர் நகராட்சியில் ஷீலா கேத்தரின், நெல்லியாளம் நகராட்சியில் சிவகாமி, கூடலூர் நகராட்சியில் வெண்ணிலா, அதிகரட்டி பேரூராட்சியில் பேபிமுத்து, உலிக்கல் பேரூராட்சியில் ராதா, ஓவேலி பேரூராட்சியில் சித்ராதேவி, கீழ்குந்தா பேரூராட்சியில் நாகம்மாள், கேத்தி பேரூராட்சியில் ஹேமமாலினி, கோத்தகிரி பேரூராட்சியில் மு.பூமணி, சோலூர் பேரூராட்சியில் கெளரி, தேவர்சோலை பேரூராட்சியில் வள்ளி, நடுவட்டம் பேரூராட்சியில் கலியமூர்த்தி, ஜெகதளா பேரூராட்சியில் பிரமிளா வெங்கடேஷ், பிக்கட்டி பேரூராட்சியில் எம்.சந்திரலேகா (காங்கிரஸ்) ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தி.மு.க. அமோக வெற்றி பெற்றதால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!