நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் திறப்பது எப்போது? கலெக்டர் தகவல்

நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து, அரசிடம் இருந்து அறிக்கை வந்த பிறகே, முடிவு செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு சேட் மருத்துவமனையில், தனியார் பங்களிப்புடன் 60 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்ஸிஜன் மையம் நிறுவப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, இன்று திறந்து வைத்தார்.

அப்போது பேசிய கலெக்டர், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் அரசு மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்புடன் ஆக்ஸிஜன் மையங்கள் ஏற்படுத்தப்பட்டதை அயடுத்து நீலகிரி மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.

தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களை திறப்பது தொடர்பாக, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அரசின் பதிலுக்கு பிறகு இதுபற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், பிற மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு, கட்டாயம் இ- பாஸ் பெற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!