நீலகிரியில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: ஆட்சியர் தகவல்

நீலகிரியில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில், பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான இடங்கள், நிலச்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, முதல்நிலை பொறுப்பாளர்கள் மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மழை முன்னேற்பாடுகள் குறித்து, உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தென் மேற்கு பருவமழை காலத்தில் உடனுக்குடன் மீட்பு மற்றும் நிவரணப்பணிகளை மேற்கொள்ள 42 மண்டலக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது என்றார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க மாவட்டத்தில் 456 வெள்ளப்பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயாராக உள்ளதாக அவர் மேலும் கூறினார். இதனிடையே மாவட்டத்தில் அப்பர் பவானியில் 109 மி.மீ, அவலாஞ்சி 83 மி.மீ, தேவாலா 57 மி.மீ, பந்தலூர் 51 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!