ஊட்டி தாவரவில் பூங்கா, அடுத்த சீசனுக்கு ரெடியாகிறது

ஊட்டி தாவரவில் பூங்கா,  அடுத்த சீசனுக்கு ரெடியாகிறது
X

அடுத்த சீசனுக்கு ரெடியாகும் ஊட்டி தாவரவியல் பூங்கா.

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில், அடுத்த சீசனுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில், எட்டு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர். கடந்த இரு மாதங்களாக மழை பெய்வதால், வார இறுதி நாட்களில், 5,000 பேர் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், செப்., - அக்., மாதங்களில் அடுத்த சீசன் நடக்க உள்ளதால், பூங்காவில், 15 ஆயிரம் மலர் தொட்டிகளை தயார்படுத்தும் பணி, துரிதமாக நடந்து வருகிறது. மழை தொடர்வதால், இப்பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், நாற்றுகளை பாதுகாத்து, மலர் தொட்டிகளில் நடவு செய்ய பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business