தேர்தல் பற்றிய புகார்களை தெரிவிக்க புதிய செயலி

தேர்தல் பற்றிய புகார்களை தெரிவிக்க புதிய செயலி
X

தேர்தல் நடத்தை விதி மீறல்கள் மற்றும், முறைகேடுகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்ட C . விஜில் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓட்டம் உதகையில் நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு ஆணையம் ஏற்பாடு செய்த இந்த ஓட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இன்ன சென்ட் திவ்யா துவக்கி வைத்து, இது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், C - விஜில் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் அனுப்பப்படும் புகார்கள் மீது 90 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தேர்தல் நடத்தை விதி மீறல்கள், புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக வரும் 48 மணி நேரத்தில் தேர்தல் பறக்கும் படை, மற்றும் தேர்தல் நிலைக்குழுவின் கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுவரை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 கோடியே 33 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யபட்டதாக இன்ன சென்ட் திவ்யா கூறினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டிய ராஜன், உதகை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மோனிகா ரானா ஆகியோர் C - விஜில் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil