தாட்கோ மானிய கடனுதவி வேண்டுமா? அப்படின்னா இதை செய்யுங்க...

தாட்கோ மானிய கடனுதவி வேண்டுமா? அப்படின்னா இதை செய்யுங்க...
X
தாட்கோ மூலம் மானிய கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஊட்டி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மருத்துவமனை அமைத்தல், ரத்தப்பரிசோதனை மையம், மருந்தகம், கண் கண்ணாடியகம் அமைக்கும் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

18 வயது முதல் 60 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தில் தாட்கோ மானியமாக 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும். நிலம் மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 30 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்படும்.

சாதி சான்று, வருமான சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, நிலம் சார்ந்த ஆவணங்கள், புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் http://application.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2443064 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஊட்டி கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story