நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா காெண்டாட்டம்

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா காெண்டாட்டம்
X

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார நடந்தது.

திட்டத்தில் 25 பேர் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். இதில் முதல்நிலை நூலகர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்..

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில், 54-வது தேசிய நூலக வார விழா 14-ந் தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார நடந்தது.

விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். உதகை ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இல்லந்தோறும் நூலகம் என்ற புதிய திட்டம் தொடக்க விழா நடந்தது.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரமீளா தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். திட்டத்தில் 25 பேர் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். இதில் முதல்நிலை நூலகர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!