கனமழை எச்சரிக்கை: உதகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு முகாம்

கனமழை எச்சரிக்கை: உதகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு முகாம்
X
நீலகிரிக்கு கன மழை தொடரும் நிலையில், உதகை, கூடலூர் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மண் சரிவும் மரங்கள் விழுந்து சாலை துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, கனமழை அறிவிப்பால் மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து 40பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் குழு உதகை மற்றும் கூடலூருக்கு வந்துள்ளது. இவர்கள், உதகை எமரால்டு பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தங்கியிருந்து தகவல்களை திரட்டி, உடனடியாக வெள்ளப்பாதிப்பு பகுதிக்கு செல்ல தயாராக உள்ளனர்.


குறிப்பாக, அவலாஞ்சி, எமரால்டு, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் பதிவு அதிகமாக உள்ளது. அதனால் எந்த நேரத்திலும் மரங்கள் விழுந்தாலோ,வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலோ பொதுமக்களை பேரிடரில் மீட்பதற்கு தயாராக உள்ளதாகவும், மீட்புப் பணிகளுக்காக அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!