உதகையில் நகராட்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உதகையில் நகராட்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

இறந்து போன ஊழியர்களின் பணபலன்களை அவர்களது குடும்பங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் உதகை ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தலைவர் பழனி தலைமை தாங்கினார். அவுட்சோர்சிங் உத்தரவை வாபஸ் பெற வேண்டும். ஊட்டி நகராட்சியில் கூடை, துடைப்பம், மண்வெட்டி, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். கடந்த 2006-ம் ஆண்டுக்கு பின்னர் நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகை நிலை, இறந்துபோன ஊழியர்களின் பண பலன்களை அவர்களது குடும்பங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!