பிரதமர் மோடி பிறந்தநாள்: நீலகிரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

பிரதமர் மோடி பிறந்தநாள்: நீலகிரியில் பாஜகவினர் கொண்டாட்டம்
X

பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடிய பாஜகவினர். 

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூரில் பகுதிகளில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை பாஜகவினர் கொண்டாடினர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாள் விழா, நீலகிரி மாவட்ட பாஜகவினரால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் பகுதிகளில் கோவில்களில் சிறப்பு பூஜைகள், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் முன்னிலையில் நகர பாஜக சார்பில், நகரப் பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜகவினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அத்துடன், ஒரு வார காலத்திற்கு சேவை வாரமாக கடைபிடித்து, பொதுமக்களுக்கு பாஜக சார்பில் சேவைகள் செய்யப்பட உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ், மாவட்ட துணை தலைவர் பரமேஷ், நகர தலைவர் பிரவீன் குமார், நகர செயலாளர் சுரேஷ் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கோத்தகிரியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க சார்பில் உதகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட போஜராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் குமார் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!